கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பட்டீஸ்வரத்தில் கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்:
கிராம கோவில்களில் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். கணவனை இழந்த பூ கட்டும் மகளிருக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர், பூ கட்டுவோர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர், பூ கட்டுவோர் பேரவை, ஒன்றிய அமைப்பாளர் சாரல் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். துணை பொறுப்பாளர் நேத்ரா மணி, ஊராட்சி பொறுப்பாளர்கள் முருகன், ரமேஷ், செந்தமிழ்ச்செல்வன், சீனிவாசன், உமா மகேஸ்வரன், முத்துக்குமார், சேகர், கண்ணப்பன், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.