தலைவாசல் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்


தலைவாசல் அருகே  டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி  பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x

தலைவாசல் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

தலைவாசல்,

தலைவாசலை அடுத்த வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள அரசு மதுக்கடையை அகற்றக்கோரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட தலைவர் பச்சமுத்து, மாவட்ட நிர்வாகி மயில்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் குள்ளுமூப்பர், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைவாசல் யூனியன் துணைத்தலைவர் அஞ்சலை ராமசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமால், தலைவாசல் ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், பொன்னுசாமி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். காட்டுக்கொட்டை மேம்பாலத்தில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து வருவாய் ஆய்வாளர் ராதாவிடம் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


Next Story