மண் அள்ளுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


மண் அள்ளுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

விவசாய நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்

தமிழ் தேசிய மக்கள் விடுதலை கழகம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கள ஊழியர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் மாநில கள ஊழியர் நிலவன், வடமதுரை களஊழியர் அழகர்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுத்து இயற்கை வளத்தை காக்க வேண்டும். எம்.சாண்ட் மணல் ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story