உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தாா்


உளுந்தூர்பேட்டை அருகே  கரும்பு பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி  கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தாா்
x

உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிா்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

செயல்விளக்க பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் மற்றும் மாவட்ட வேளாண் துறை இணைந்து விவசாயிகளின் நலனுக்காக நானோ தொழில்நுட்பத்தில் திரவ வடிவிலான நானோ யூரியாவை தயாரித்து, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறார்கள். இந்த நானோ உரங்களை பயன்படுத்துவது எப்படி?, அதனை டிரோன் மூலம் பயிர்களுக்கு தெளிப்பது எவ்வாறு என்பது குறித்த செயல் விளக்க பயிற்சி உளுந்தூர்பேட்டை பகுதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

டிரோன் மூலம் உரம் தெளிப்பு

அந்த வகையில் உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிா்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் தலைமை தாங்கி, செயல் விளக்க பயிற்சியை தொடங்கி வைத்து, உரம் தெளிக்கும் பணியை பார்வையிட்டார். பின்னா் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, வேளாண்துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதில் வேளாண்துறை அதிகாாிகள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.


Next Story