விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி


விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கடலூர்

கடலூர்

உலக விபத்து நாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி கடலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உதவி செய் திட்டத்தின் மூலமாக உயிரிழப்புகளை தவிர்ப்பது குறித்தான உதவி செய் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story