போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பா.ம..க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் லண்டன் அன்பழகன் வரவேற்றார். இதில் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் முரளிதரன், ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் மகாலிங்கம், மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க.அய்யாசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்களிடையே பெருகிவரும் போதை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாநில நிர்வாகிகள் காசி.பாஸ்கரன், பாக்கம் சக்திவேல், விமல், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கமல்ராஜா நன்றி கூறினார்.


Next Story