வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்


வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்
x

சியாத்தமங்கை ஊராட்சியில் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சியாத்தமங்கை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறாா. தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதைடுத்து அவர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சியாத்தமங்கை கிராமத்திற்கு சென்று டெங்கு காய்ச்சல் கண்காணிப்பு பணி, கொசுப்புழு ஒழிப்பு பணி, கொசுமருந்து அடிக்கும்பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் அந்த பகுதி மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வள்ளுனர் லியாக்கத் அலி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சிவகாமி அன்பழகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன், டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story