டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தலைமைச்செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலையில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரம், பொதுப்பணித்துறை மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.