கடையம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
கடையம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடையம்:
கடையம் அருகே உள்ள புலவனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு காய்ச்சல் பரவியது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் சோதனை செய்து பார்த்ததில், 2 சிறுமிகளுக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக 2 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் ஒரு சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி சங்கர் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ நல அலுவலர் பழனிக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க குளோரின் கலந்த குடிநீர் மற்றும் கொசுக்கான புகை மருந்து அடித்தல், ஆங்காங்கே தேங்கி இருக்கும் தண்ணீர்களை அகற்றுதல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.