டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்
டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் தெரிவித்ததாவது:- டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் ஒருங்கிணைந்து களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும்.
மருத்துவ பரிசோதனை
பழைய டயர், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல் போன்றவற்றில் மழை தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சிய தண்ணீரை பயன்படுத்த வேண்டும். குளோரினேசன் செய்து குடிநீர் வழங்க வேண்டும். காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் உரிய மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், சுகாதார துணை இயக்குனர்கள் அர்ஜுன் குமார், இந்திரா மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.