குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு


குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு
x

குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு

தஞ்சாவூர்

கும்பகோணம்,


கும்பகோணத்தில் தாமதமாக வந்ததாக கூறி குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் 57-க்கும் மேற்பட்ட மையங்களில் 15 ஆயிரத்து 877 பேர் தேர்வு எழுதினார். இதற்காக தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காலை 9 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

9 மணிக்கு மேல் தேர்வு எழுத வந்த நூற்றுக்கணக்கானோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தர்ணா போராட்டம்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி அருகே ஒரு தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தாமதமாக வந்ததாக கூறி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 15-க்கு மேற்பட்ட பெண்கள் அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக தாமதமாக வந்ததற்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கலைந்து செல்லும்படியும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story