பல் சிகிச்சை முகாம்


பல் சிகிச்சை முகாம்
x

கீழ்வேளூரில் பல் சிகிச்சை முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூரில் உள்ள நவீன் பல் ஆஸ்பத்திரி, கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் இணைந்து பல் சிகிச்சை முகாம், விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. கீழ்வேளூர் ரோட்டரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க உதவி ஆளுனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் வின்சன்ட் பிரபாகரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பல் வேர் சிகிச்சை, இம்ப்லான்ட் முறையில் பல் கட்டுதல், பல் அடைத்தல் மற்றும் பல் எடுத்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நவீன் குமார், நித்யா வர்ஷினி, சாருமேனன் ஆசாத், மாதுரி, அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story