முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு
முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடந்தது.
திருச்சி
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழாவின் 12-ம் நாளான நேற்று காலை அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்தார். மாலையில் அபிஷேகம் கண்டருளிய பின்னர் இரவில் அம்மன் வெண்ணைத்தாலி கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பல்லக்கில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து வழிநடை உபயம் கண்டருளிய பிறகு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
Related Tags :
Next Story