வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய புதிய கட்டிடம்


வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய புதிய கட்டிடம்
x

வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூர் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் இரண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் வாங்கியதற்கான அரசு மானியம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கான ஆணையினை விவசாயிகளிடம் வழங்கினார்.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஸ்ரீதரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story