பெருமாள்-தாயார் பூந்தேரில் புறப்பாடு


பெருமாள்-தாயார் பூந்தேரில் புறப்பாடு
x

பெருமாள்-தாயார் பூந்தேரில் புறப்பாடு வந்தனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலின், தேர்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் திருவிழா அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7-ம் நாளான நேற்று பெருமாள்- தாயார் சிறப்பு அலங்காரத்தில் பூந்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் வணங்கினர். இன்று (வெள்ளிக்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story