தூத்துக்குடி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கு போட்டு சாவு


தூத்துக்குடி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகர் தேரி ரோட்டை சேர்ந்தவர் ராமநாராயணன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 42). இவர் தூத்துக்குடி அருகிலுள்ள புதூர் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் சமீபகாலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ஆனாலும் சிறுநீராக கோளாறில் முன்னேற்றம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதனால் அவர் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டாராம்.

விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாட்சி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இது குறித்து மீனாட்சியின் மகன் காசிவிசுவலிங்கம் அளித்த புகாரின் பேரில் சம்பவ வீட்டுக்கு சென்று உதவி போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி சம்பவ வீட்டுக்கு சென்று மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story