துணை இயக்குனர் ஆய்வு


துணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2023 1:15 AM IST (Updated: 22 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே பரளி புதூர் மற்றும் முடக்குசாலை கிராம பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டல பூச்சியல் வல்லுனர் ஜான்விக்டர், மாவட்ட பூச்சியல் வல்லுனர் தெய்வேந்திரன், நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story