மணிலா பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு


மணிலா பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
x

அரசம்பட்டில் மணிலா பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் மணிலா பயிர்களை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது மணிலா விதை உற்பத்தியில் அதிக மகசூல் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்ய மணிலா பயிரில் 2-வது களை எடுக்கும் போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும். பூ பூக்கும் தருணத்தில் 2 கிலோ நிலக்கடலை ரிச் பூஸ்டர் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அதிக பூக்கள் பிடித்து முழுமையாக காய்கள் கிடைக்கும், மகசூல் 15 சதவீதம் கூடுதலாவும் கிடைக்கும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கொசப்பாடி, நெடுமானூரில் உள்ள பயிர்களையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) கிருஷ்ணகுமாரி, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், ஆரோக்கியசாமி, முகமது நாசர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.


Next Story