மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு


மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அனைத்து இடங்களையும் பார்வையிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகைப்பதிவு முறை,

மருத்துவமனை சுகாதாரம், மருந்துகள், நிதிநிலை பயன்பாடு, கணக்குத் தணிக்கை, புற நோயாளிகள், உள் நோயாளிகள் வருகை டயாலிசிஸ் மகப்பேறு, மற்றும் முக்கிய அறுவை சிகிச்சை குறித்த நிலைகளையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் ஒருங்கிணைந்த மகப்பேறு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அன்போடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின் போது வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியன், டாக்டர் டேவிட் விமல்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story