தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் ஆய்வு
சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கபிஸ்தலம்;
சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை போலீஸ் நிலையத்துக்கு தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் ஆய்வு மேற்கொள்ள வந்தார். அவரை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழலை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் எந்தவித வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு
தொடர்ந்து போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள வாகனங்களை ஒழுங்கு படுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். போலீஸ் நிலையத்துக்கு வரும் வழக்குகளை உடனுக்குடன் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார். சுவாமிமலையில் கோவில் உள்ளதால் எந்த நேரத்திலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என காவலர்களை கேட்டுக் கொண்டார்.