உயர்கோபுர மின்விளக்குகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்


உயர்கோபுர மின்விளக்குகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்
x

கானலாபாடி ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்குகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கானலாபாடி ஊராட்சியில் அடங்கிய கானலாபாடி, ஊதப்பூண்டி, ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் பட்டி ஆகிய ஊர்களில் 15 இடங்களில் புதியதாக உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதனை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரும் நிகழ்ச்சி அனைத்து ஊர்களிலும் நடந்தது.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உயர்கோபுர மின்விளக்குகளின் சுவிட்சுகளை அமுக்கி மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய அவைத்தலைவர் ரவி என்ற இளஞ்செழியன், ஒன்றிய பொருளாளர் சுப்பராயன், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், கிளை செயலாளர்கள் வெங்கடேசன், பச்சையப்பன், கருணாகரன், சிவக்குமார், ரவீந்திரன், ஊராட்சி பிரதிநிதிகள் சீனிவாசன், தர்மராஜ், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் துரைராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story