துணை தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் 16 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 16 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அதன் விவரம் வருமாறு:-
அருப்புக்கோட்டை மண்டல துணைத்தாசில்தார் முருகன், விருதுநகர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனித்துணைதாசில்தார் ஆண்டாள், ராஜபாளையம் மண்டல துணை தாசில்தாராக நியமனம் பெற்றுள்ளார். ராஜபாளையம் மண்டல துணை தாசில்தார் கோதண்டராமன், வெம்பக்கோட்டை தலைமையிட துணைத்தாசில்தாராகவும், வெம்பக்கோட்டை தலைமையிட துணை தாசில்தார் திருப்பதி வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணைத்தாசில்தாராகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் தனம், ராஜபாளையம் தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு தனித்துணைதாசில்தாராகவும், ராஜபாளையம் தேர்தல் பிரிவு தனி துணைதாசில்தார் கலைச்செல்வி, வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலராகவும் வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலர் விஜி மாரி விருதுநகர் கலெக்டர் அலுவலக ஐ பிரிவு தலைமை உதவியாளராகவும், விருதுநகர் கலெக்டர் அலுவலக ஐ பிரிவு தலைமை உதவியாளர் அப்பாதுரை ராஜபாளையம் தலைமையிடத் துணைத்தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி மண்டல துணைத்தாசில்தார் ஆனந்தம், சிவகாசி தாலுகா தேர்தல் பிரிவுக்கும், சிவகாசி தேர்தல் பிரிவு தனித் துணைதாசில்தார் கார்த்திக் ராஜ், சிவகாசி மண்டல துணைத்தாசில்தாராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
விருதுநகர் தாலுகா தேர்தல் பிரிவில் பணியாற்றும் பிரின்ஸ் ரஞ்சித் சிங் விருதுநகர் தலைமயிடத்து துணைத்தாசில்தாராகவும், தலைமையிட துணைத்தாசில்தார் சந்திரமோகன் விருதுநகர் தாலுகா தேர்தல் பிரிவுக்கும் நியமனம் பெற்றுள்ளனர். திருச்சுழி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் சரவணகுமார் திருச்சுழி தேர்தல் பிரிவுக்கும், சிவகாசி தேர்தல் பிரிவுதனித் துணைத்தாசில்தார் யாஸ்மின் திருச்சுழிமண்டல துணைத்தாசில்தாராகவும், விருதுநகர் சிப்காட் நில எடுப்பு பிரிவில் பணியாற்றும் சரவணன் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக தேர்தல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.