பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி


பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி
x

ராட்சத காற்றாடி இறக்கையை ஏற்றி சென்றபோது, கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றது.

திண்டுக்கல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி ராட்சத காற்றாடி இறக்கையை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை மகாராஷ்டிராவை சேர்ந்த ஜோடா (வயது 45) என்பவர் ஓட்டினார். தூத்துக்குடிக்கு சென்றதும், அங்கிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி செல்லுமாறு ஜோடா அறிவுறுத்தப்பட்டார். இதனையடுத்து அவர், கர்நாடகா நோக்கி லாரியில் புறப்பட்டார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென லாரியின் முன் பக்க 'சேஸ்' கட்டாகி 2 டயர்களும் உள்ளே சென்றது. இதனை கவனிக்காத ஜோடா, 5 கிலோமீட்டர் தூரத்துக்கு லாரியை ஓட்டினார். ஒரு கட்டத்தில் சத்தம் கேட்டு லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் லாரி திரும்பி இருந்தால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story