வழியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


வழியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி   பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

நாட்டறம்பள்ளி அருகே வழியில் பள்ளம் தோண்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே வழியில் பள்ளம் தோண்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதையில் பள்ளம்

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள நாச்சிகன் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சுமார் 50 வருட காலமாக பயன்படுத்தி வந்த வழியை மம்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர், தங்களுக்கு சொந்தமான இடம் எனவும், இதற்கான பட்டா உள்ளது என்றும் கூறி அந்த பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் 32 சென்ட் நிலத்தை சமன் செய்து பள்ளம் தோண்டி உள்ளனர்.

மேலும் பள்ளம் தோண்டும் பொழுது குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டதால் அந்தப்பகுதி மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பள்ளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

தனிநபருக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும், 5 அடி அளவில் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் நேற்று தங்களது குழந்தைகள், பள்ளி மாணவ- மாணவிகளுடனும், காலி குடங்களுடனும் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இறங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story