100 நாள் வேலை திட்ட பெண்களுக்குதீத்தடுப்பு செயல் விளக்கம்
ராசிபுரம்
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு கவுண்டம்பாளையம் ஏரியில் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி சிறப்பு நிலை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். தீ தடுப்பு முன் எச்சரிக்கை தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு ஏரி, கிணறு, குட்டை, ஓடை, ஆறு, நீர்வீழ்ச்சி போன்ற நீர் நிலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது நீர் நிலைகளில் சிக்கியவர்களை அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணர்வு, போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். திறந்தவெளி கிணறுகளை மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் தவறி விழா வண்ணம் பாதுகாப்பு தடுப்பு சுவர் மற்றும் வேலி அமைத்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.