வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்


வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்
x

கொள்ளிடம் அருேக அரசூாில் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருேக அரசூாில் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீர் தேக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிக்கோயில் தெரு, புளியம்தோப்பு தெரு, மேலத்தெரு, சந்தோஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் போது உரிய வடிகால் வாய்க்கால் இல்லாமல் இருப்பதாலும், தெருக்கள் பள்ளமான பகுதியில் இருப்பதாலும் மழைநீர் அப்பகுதியில் குளம் போல தேங்கி தெருக்களை சூழ்ந்து விடுகிறது.

மக்கள் அவதி

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைபெயும் போது மக்கள் பொருட்களை இழந்து அவதிப்படும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மனஉளைச்சலுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் மழைநீர் வெளியேறி செல்ல உரிய வசதி இல்லாவிட்டாலும் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் தேங்கும் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் தன்மை வாய்ந்தது.

தூர்வார கோரிக்கை

ஆனால் சிறு வடிகால் வாய்க்கால்கள் அப்பகுதியில் தூர்வாராமல் இருப்பதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து வடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. தற்போது உள்ள நிலைமையில் இந்த கோடை காலத்திலேயே குடியிருப்புக்கு அருகில் உள்ள சிறு வடிகால் வாய்க்கால்களை தூர் வாருவதன் மூலம் வரும் மழைக்காலத்தில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதை தவிர்க்க முடியும். எனவே மேற்கண்ட பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் நலன் கருதி வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story