ஆவணம் புதுக்குளம் ஏரியை தூர்வாரும் பணி


ஆவணம் புதுக்குளம் ஏரியை தூர்வாரும் பணி
x

தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து ஆவணம் பெரியநாயகிபுரம் புதுக் குளம் ஏரியை தூர்வாரும் பணியில் கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்,

தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து ஆவணம் பெரியநாயகிபுரம் புதுக் குளம் ஏரியை தூர்வாரும் பணியில் கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவணம் புதுக்குளம்

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் - பெரியநாயகிபுரம் கிராமத்தில் புதுக்குளம் என்ற ஏரி உள்ளது. 62 ஏக்கர்பரப்பளவும், 3.2 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புதுக்குளம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மண் மேடுகளும் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காணப்பட்டது. இதனால், குளத்தைச் சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் வசதி இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை உருவானது. விளையாட்டு திடல் போல் காணப்பட்ட புதுக்குளம் ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. ஏரியில் நீர் இல்லாததால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.

பாராட்டு

கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கிய இந்த ஏரியை மீட்டெடுக்க கிராம மக்கள் ஒருங்கிணைந்து தங்கள் சொந்த செலவில், கைபா என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் களப்பணியில் இறங்கினர்.இதைத்தொடர்ந்து கடந்த 25 நாட்களாக 2 பொக்லின் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களின் உதவியுடன் முட்புதர்களை அப்புறப்படுத்தி, ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பிறகு இந்த ஏரியில், தேவையான அளவு பாசனத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கிராம மக்களின் இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story