பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5¾ லட்சத்தில் டெஸ்க், பெஞ்ச் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்


பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5¾ லட்சத்தில் டெஸ்க், பெஞ்ச் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
x

சோளிங்கரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5¾ லட்சத்தில் டெஸ்க், பெஞ்ச்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மேரி செரின் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு டெஸ்க், பெஞ்ச் வழங்கி பேசினார்.

அப்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலக்கு வைத்து படித்து மருத்துவராகவும், பொறியாளராகவும், விஞ்ஞானிகளாகவும் வரவேண்டும். கல்வி மட்டும் தான் ஒவ்வொருவரையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்றார்.

நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, காங்கிரஸ் நகர செயலாளர் கோபால், தி.மு.க. நகர செயலாளர் கோபி, காங்கிரஸ் இளைஞர் அணி என்.மணி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜா மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story