திருமணம் ஆகாத விரக்தியில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆகாத விரக்தியில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ேபாடி அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி டி.வி.கே.கே. நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இவர், போடி அருகே ரங்கநாதபுரத்தில் உள்ள தனது தம்பி ஒர்க்ஷாப்பில் தங்கினார். அங்கு அவர் ஒர்க்ஷாப்பின் மேற்கூரையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதற்கிடையே தகவல் அறிந்த அவரது தம்பி மதன் அங்கு வந்தார். அவர் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story