பருத்தியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லை


பருத்தியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லை
x

பருத்தியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

பருத்தியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், ராமானுஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்ட்டு்ள்ளது. தற்போது மழை பரவலாக பெய்து வருவதால் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது:-

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விலை குறைந்தது

போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் பருத்தியில் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் விலை இல்லை. கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்திற்கு விலை போனது. ஆனால் தற்போது குவிண்டால் ரூ.6 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மட்டுமே போகிறது. இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் நூல் விலை அதிகமாக உள்ளதால் பெரும்பாலான பஞ்சு ஆலைகள் செயல்படாமல் உள்ளது. இதனால் பருத்தி வாங்குவது மிகவும் குறைந்து விட்டது.

மேலும் கர்நாடகாவில் இருந்தும் பருத்திகள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் பருத்தியை விரும்பி யாரும் வாங்குவதில்லை. இதனால் மூடை, மூடையாக வீட்டிலும், குடோனிலும் பருத்தி தேக்கம் அடைந்துள்ளது.

ஏமாற்றம்

காடுகளில் பருத்தியை எடுப்பதற்கு நபர் ஒன்றுக்கு கூலியாக ரூ.350 வழங்க வேண்டி உள்ளது. ஆனால் தற்போது இந்த விலை கூலிக்கு கூட போதவில்லை. இதனால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

சென்ற ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தும், விலையும் அதிகமாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதேபோல் இந்த ஆண்டும் விலை அதிகமாக கிடைக்கும் என நினைத்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலையில் பருத்தி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story