கல்வராயன் மலையில் 1,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன் மலையில் 1,800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்:
தலைவாசல் அருகே கல்வராயன் மலை கரியகோவில் சேம்பூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 9 பேரல்களில் 1,800 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தரையில் கொட்டி போலீசார் அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச ஊறல் வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire