2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

கல்வராயன்மலையில் 2000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, புதூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாரய ஊறலை போலீசார் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். இதையடுத்து சாராய ஊறலை பதுக்கி வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story