250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
மாதகடப்பா மலைப்பகுதியில் 250 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதியான மாதகடப்பா காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக, வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாதகடப்பா பிரிவு வானவர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அடர்ந்த வனப்பகுதியில், 250 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த வனத்துறையினர், தப்பிச்சென்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story