500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

வடகாடு அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

22 பேர் பலி

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் எத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி ஏராளமான எரி சாராய ஊறல்களை கண்டு பிடித்து அவற்றை அழித்து வருகின்றனர்.

500 லிட்டர் சாராயம் அழிப்பு

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகேயுள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் எரி சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, தனிப்படை போலீசார் மற்றும் வடகாடு போலீசார் இணைந்து அப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 5 பேரல்களில் போடப்பட்டு இருந்த 500 லிட்டர் எரி சாராய ஊறலை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில், கைப்பற்றப்பட்ட எரி சாராய ஊறல்களை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் இந்த ஊறல்களை போட்டது, என்பது குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story