80 கிலோ தரமற்ற மீன்கள் அழிப்பு
சிவகாசி மார்க்கெட்டில் 80 கிலோ தரமற்ற மீன்கள் அழிக்கப்பட்டன.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி நிர்வாகம் அடங்கிய குழுவினர் மீன் மார்க்கெட்டில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது மீன் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த மீன்களில் சுமார் 80 கிலோ அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கேயே அழித்தனர். அதிகாரிகளின் ஆய்வின் போது ஒரு மீன் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்ற போது அந்த மீன் வியாபாரிக்கும், அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story