தென்திருப்பேரை பகுதியில் சாதி அடையாளங்கள் அழிப்பு
தென்திருப்பேரை பகுதியில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்முறைகளை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுவர்கள் மற்றும் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் வரையப்பட்ட சாதிய ரீதியான வண்ணங்களை அழிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள ஆற்றுரங்கால், மணல்மேடு, தென்திருப் பேரை பகுதிகளில் பொதுஇடங்களில் வரையப்பட்ட சாதி அடையாளங்களை அகற்றினர். இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story