வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சியை அடுத்த வாத்தலை அருகே உள்ள குணசீலம் மலையப்ப சாலையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 51). இவர் கடந்த 17-ந் தேதி இரவு தனது ஊரில் நடத்த பொங்கல் விளையாட்டு போட்டிகளை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சண்முகம் வீட்டில் நுழைந்தபோது, மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டின் மேற்கூரையை பிரித்து ஏறி கொண்டிருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சண்முகம் வாத்தலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், சிறுகாம்பூரை சேர்ந்த பெரியசாமி மகன் பிரதீப் (32) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story