காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்


காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்
x

ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காவிரி ஆற்றில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி

ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காவிரி ஆற்றில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளன. காவிரி கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் கூடி, நீராடி, புத்தாடைகள் அணிந்து படித்துறையில் தலைவாழை இலை போட்டு காவிரி தாய்க்கு, காப்பரிசி, பழங்கள், காதோலை, கருகமணி உள்பட மங்கல பொருட்கள் வைத்து படையலிட்டு, கற்பூர தீபம் காட்டி வழிபடுவார்கள். ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை களைகட்ட தொடங்கியுள்ளது.

மேலும், சிந்தாமணி ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, முக்கொம்பு, கல்லணை மற்றும் காவிரி ஆறு பாயுமிடமெல்லாம் ஆடிப்பெருக்கு விழாவை வரவேற்கும் விதமாக மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பொதுமக்களின் நலன் கருதி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் காவிரி ஆற்றில் ரோந்து சென்று வருகிறார்கள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று இறங்கவோ மற்றும் குளிக்கவோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் தாலுகா வாரியாக விவரம் வருமாறு:-

தொட்டியம் தாலுகா

1.உன்னியூர், 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், 3. ஸ்ரீராமசமுத்திரம், 4. சீலைப்பிள்ளையார்புத்தூர் 5. காடுவெட்டி, 6. நத்தம், 7. எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), 9. சீனிவாசநல்லூர் (மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம்), 10. மணமேடு 11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை) மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை -11

முசிறி தாலுகா

முசிறி மேற்கு காவிரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம் என மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை - 7

ஸ்ரீரங்கம் தாலுகா

1.பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை), 2. முக்கொம்பு, 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, 6. பழூர் படித்துறை, 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை, 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை, 9. அந்தநல்லூர் படித்துறை, 10. திருப்பராய்துறை - துலாஸ்தானம் 11. மேலூர் அய்யனார் படித்துறை, 12. கீதாபுரம் படித்துறை, 13. அம்மா மண்டபம் படித்துறை, 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை, 16. பனையபுரம் படித்துறை, 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை 18. கிளிக்கூடு படித்துறை

மண்ணச்சநல்லூர் தாலுகா

1. கரியமாணிக்கம் மேற்கு கிராமம் - வாத்தலை, 2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் - சிறுகாம்பூர், 3. திருவாசி கிராமம் - துடையூர் களிங்காயிகோவில், 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்.

திருவெறும்பூர் தாலுகா

1. வேங்கூர் பூச படித்துறை, 2. பனையக்குறிச்சி படித்துறை, 3. கீழ முல்லக்குடி படித்துறை, 4. ஒட்டக்குடி படித்துறை

லால்குடி வட்டத்தில் 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் - அப்பாத்துரை கிராமம், 2. கொள்ளிடம் ஆறு - கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி.

மாநகரப்பகுதி

1. அம்மா மண்டபம், 2. கருடா மண்டபம், 3. கீதாபுரம், 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை - 2, 5. காந்தி படித்துறை 6. ஓடத்துறை 7. அய்யாளம்மன் படித்துறை, 8. தில்லைநகர் படித்துறை - 2

ஆடிப்பெருக்கு தினத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடி-18 விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story