திருச்சி மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்


திருச்சி மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்
x

திருச்சி மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எல்லைக்குட்பட்ட இடங்களில் இன்று (புதன்கிழமை) காலை மற்றும் மாலையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

பீமநகர்- அடைக்கலமாதா கோவில், பீரங்கிகுளம்- கள்ளர்தெரு, இ.பி.ரோடு-கீழவாசல்அக்ரஹாரம், எடமலைப்பட்டிபுதூர்-கீழபஞ்சப்பூர், காந்திபுரம்-பெருமாள்கோவில்தெரு,இருதயபுரம்-சங்கிலியாண்டபுரம்,மேலகல்கண்டார்கோட்டை-அருணாச்சலம் நகர் அங்கன்வாடிமையம், பெரியமிளகுபாறை-குளத்துக்கரை, ராமலிங்கநகர்-குமரன்நகர், ஸ்ரீரங்கம்-வடக்குவாசல், தெப்பக்குளம்-கீழஆண்டாள்வீதி, திருவானைக்காவல்-புலிமண்டபசாலை, உறையூர்-மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் இன்று மாலையில் முகாம் நடைபெறுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம்

இதேபோல் காமராஜ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட ராஜாராம் சாலையில் காலையிலும், தென்றல்நகரில் மாலையிலும், காட்டூர்- பாத்திமாநகரில் காலையிலும், வடக்கு காட்டூர் நூலகத்தில் மாலையிலும், சுப்பிரமணியபுரம்-எல்.எஸ்.பி.காலனியில் காலையிலும், தாமரைநகரில் மாலையிலும், தென்னூர்-காஜாத்தோப்பில் காலையிலும், ஜாகிர்உசேன்தெருவில் மாலையிலும், திருவெறும்பூர்-கக்கன்காலனியில் காலையிலும், எலியட்காலனியில் மாலையிலும் முகாம் நடக்கிறது.


Next Story