பெரம்பலூரில் இன்று ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களின் விவரம்


பெரம்பலூரில் இன்று ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களின் விவரம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களின் விவரம் வருமாறு:-

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கலம் குறுவட்ட பகுதிக்குட்பட்ட வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெண்பாவூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. பெரம்பலூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குரும்பலூர் மற்றும் பெரம்பலூர் குறுவட்ட பகுதிகளுக்கு வேலூர், எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம் ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது. குன்னம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் தலைமையில் வடக்கலூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட அகரம் சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி மற்றும் நன்னை (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது. ஆலத்தூர் தாலுகாவில் ஆர்.டி.ஓ. தலைமையில் செட்டிக்குளம் மற்றும் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு, கிழக்கு), கொட்டரை ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது, என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story