பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டிகள் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், 15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

வெற்றி பெற்றவர்களின் விவரம்

பள்ளி மாணவர்களுக்கான கபடி, கால்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து, சிலம்பம், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடா்ந்து நேற்று கல்லூாி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில் குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தடகள போட்டிகள், ஆக்கி, டேபிள் டென்னிஸ், கூடை பந்து, நீச்சல் போட்டி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரிகளுக்கிடையே நடந்த பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் லயோலா கல்லூரி மாணவி கொலுசியா முதலிடத்தையும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல் பரிசை ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி அபினயாவு, 400 மீட்டரில் முதல் இடத்தை லயோலா கல்லூரி மாணவி கனிஷா டினாவும், 800 மீட்டரில் முதல் இடத்தை கோலி கிராஸ் கல்லூரி மாணவி ரம்யா, 1500 மீட்டரில் முதல் இடத்தை ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி ஹரிஷ்மாவும் பிடித்தனர்.

பள்ளி- கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடத்தை களியக்காவிளை மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி மாணவி அபிஷாவும், நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி அபினயாவும், தட்டு எறிதலில் முதல் இடத்தை அன்னை வேளாங்கன்னி கல்லூரி மாணவி ஆசிகாவும், குண்டு எறிதலில் முதல் இடத்தை ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கோபி ஸ்ரீ பிடித்தனர்.

இதேபோல பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆண்கள் பிரிவிலான 100 (பிரீஸ்டைல்) மீட்டர் மற்றும் 200 மீட்டர் நீச்சல் (மிட்னி)போட்டிகளில் முதல் இடத்தை வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் நிதின் சென்னா வென்றார். இதேபோல 100 (பிரஸ்டோக்)மீட்டர் நீச்சல் போட்டியில் வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் சிவபாலா மற்றும் கேந்திரா வித்யாலயா பள்ளி மாணவர் முகில் (பேக் ஸ்டோக் பிரிவில்) ஆகியோரும் வென்றார்கள். பெண்கள் பிரிவில் 100 மீட்டர் (பிரீஸ்டைல்)நீச்சல் போட்டியில் முதல் இடத்தை கேந்திரா பள்ளி மாணவி மிர்னல் சென்னாவும், டதி பள்ளி மாணவி ரம்யா தேவி (பட்டர் பிளை பிரிவில்)ஆகியோர் வென்றனர்.

நீச்சல் போட்டிகள்

கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகளில் 100 மீட்டரில் பிரீஸ்டைல், பட்டர் பிளை பிரிவில் முதல் இடங்களை இந்து கல்லூரி மாணவர் விஷ்வா பரத் மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவன் ஸ்ரீ வாஸ்தமன் (மிட்லே பிரிவில்) முதல் இடத்தை பிடித்தனர். கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் 200 (பிரஸ் ஸ்ேடாக்), (பிரீஸ்டைல் பிரிவு) மற்றும் 400 மீட்டர் (மிட்லே) நீச்சல் போட்டிகளில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி மாணவி ஜெனிமோள் முதல் பரிசை வென்றார்.

ஆக்கி போட்டியில் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஆண்கள் பிரிவில் திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் பிரிவில் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியும் முதல் இடத்ைத பிடித்தது. இதனைதொடா்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் மாற்றுத்திறனாளிக்கு இடையே விளயைாட்டு போட்டிகள் தொடங்குகின்றன.


Next Story