முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி, கால்பந்து, கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி, கால்பந்து, கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

5 பிரிவுகளில் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், 15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இறுதிப் போட்டி

நேற்று 2-வது நாளாக போட்டிகள் நடந்தது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான கபடி, கால்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து, சிலம்பம், தடகளப் போட்டிகள் போன்றவை நடந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் வந்திருந்தனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன.

நேற்று நடந்த இறுதிப் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகள் விவரம் வருமாறு:-

குழு- தனிநபர் போட்டிகள்

கபடி போட்டியில் அழகப்பபுரம் சேக்ரட் ஹார்ட் பள்ளி முதலிடம் பிடித்தது. கால்பந்து போட்டியில் தூத்தூர் பதினோறாம் பயஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. கைப்பந்து போட்டியில் திருவட்டார் அருணாச்சலம் பள்ளி முதலிடம் பெற்றது.

மேஜைப்பந்து போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த கிஷோர் பிரசாத் முதலிடத்தையும், இரட்டையர் பிரிவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திலன்ராம், அபினேஷ் ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர்.

சிலம்பம்

மேஜைப்பந்து போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவியும், இரட்டையர் பிரிவில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிவஉத்ரா, ஸ்ரீஜா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

சிலம்பம் (கம்பு வீச்சு) போட்டியில் கணபதிபுரம் ஸ்ரீராம்ஜி பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரிஷ்மாவும், அலங்கார வீச்சு போட்டி, ஒற்றை சுருள்வாள் போட்டி, மான்கொம்பு வீச்சு போட்டி, இரட்டை கம்பு வீச்சு போட்டி ஆகிய போட்டிகளில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி சுபசெரினும் முதலிடம் பெற்றனர்.

தடகளப் போட்டிகள்

தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெட்டூர்ணிமடம் செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி நந்தனாவும், 200 மீட்டர் ஓட்டத்தில் காரங்காடு செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி அனிஷா, 400 மீட்டர் ஓட்டத்தில் காரங்காடு செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி ஆக்ஸ்லின், 800 மீட்டர் ஓட்டத்தில் ஒற்றையால்விளை அரசு பள்ளி மாணவி ஹரீஸ்வரி, 1500 மீட்டர் ஓட்டத்தில் காரங்காடு செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி ஆன்சி, 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெட்டூர்ணிமடம் செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி மீனு ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

உயரம் தாண்டுதல் போட்டியில் வெட்டூர்ணிமடம் செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி முத்துலட்சுமி, நீளம் தாண்டுதல் போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளி மாணவி ஹனுஷா, வட்டு எறிதல் போட்டியில் புத்தளம் எல்.எம்.பி.சி. பள்ளி மாணவி ஆஷா, குண்டு எறிதல் போட்டியில் வெட்டூர்ணிமடம் செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவி ருத்ரஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். நாளை (திங்கட்கிழமை) 3-வது நாள் போட்டிகள் நடைபெறும்.


Next Story