சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்
வருகிற 7-ந் தேதி சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது,
மதுரை
தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட விழுப்புரம்-தாளநல்லூர் ரெயில்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 7-ந் தேதி ஒரு நாள் மட்டும் விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
அதாவது, இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்து சேருகிறது. அங்கிருந்து வழக்கமான பாதையில் குருவாயூர் வரை இயக்கப்படுகிறது. இதற்காக இந்த ரெயில் மாற்றுப்பாதையில் உள்ள மேற்கண்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story