தேவர் ஜெயந்தி விழா
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கரன்கோவில் அண்ணா பஸ் நிலையம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க. பிரமுகரும், சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன் கோட்டை கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து புளியங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தலைவன்கோட்டை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயபாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், தலைவன்கோட்டை நாட்டாண்மை சுப்பையா பாண்டியன், புளியங்குடி தேவர் சமுதாய நாட்டாண்மை முத்துப்பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சண்முகபிரியா, குமரேசராஜா, பண்பொழி பேரூராட்சி துணை தலைவர் நாகலட்சுமி, கவுன்சிலர்கள் கணேசன், ஜோதி சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. பிரமுகரும், ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியன் செய்திருந்தார்.