கிடைக்கும் வேலைகளில் சேர்ந்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள் மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை


கிடைக்கும் வேலைகளில் சேர்ந்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள் மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை
x

வாழ்க்கையில் வெற்றிபெற கிடைக்கும் வேலைகளில் சேர்ந்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள் என்று மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

திருச்சி

வாழ்க்கையில் வெற்றிபெற கிடைக்கும் வேலைகளில் சேர்ந்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள் என்று மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரதிருச்சி, ஜூலை.9-

வாழ்க்கையில் வெற்றிபெற கிடைக்கும் வேலைகளில் சேர்ந்து திறமையை வளர்த்து கொள்ளுங்கள் என்று மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

வழிகாட்டும் நிகழ்ச்சி

தமிழ்நாடு போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகர் மற்றும் மத்திய மண்டல போலீசாரின் குடும்ப மாணவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியதாவது:-

மாணவர்கள் தங்களுடைய 15, 16 வயதிலேயே எதிர்காலத்தை குறித்து திட்டமிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு துறை (ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அவசியமாக இருக்கிறது. அந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம், ஆராய்ச்சி சம்பந்தபட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம்.

மேலும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள என்ஜினீயர்களுடன் போட்டி போடும் அளவுக்கு நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

உடன்மொழி திறன்

இன்றைய காலகட்டத்திற்கு 4 விதமான மொழிகள் தேவையாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வாக இருந்தாலும் முதலில் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். 3-வது மொழியாக கணினி அறிவியலை பயில வேண்டும்.

4-வதாக உடல் மொழித்திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசுத்தேர்வு, அரசு வேலை இன்றைக்கு சவாலாக இருக்கிறது. மக்களுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அரசுத்துறையை தேர்வு செய்யலாம்.

கனவை நனவாக்குங்கள்

சமீபத்தில் சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படித்து முடித்தவுடன் பெரிய வேலை கிடைத்தால்தான் போவேன் என்று இருக்கக் கூடாது. குறைந்த ஊதியமாக இருந்தாலும் கிடைக்கும் வேலையில் உடனடியாக சேர்ந்து விடுங்கள்.

பின்னர் அங்கு உங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். போலீசார் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டி இருக்கிறது. உங்கள் பெற்றோரின் கனவுகளை நீங்கள் நனவாக்குங்கள், பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீசார் மற்றும் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 380-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு நன்றி கூறினார்.

பாராட்டு சான்றிதழ்

இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு திருச்சி சரகத்திற்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் அந்தந்த மாவட்ட செயல்பாடுகள் குறித்து திருச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், திருச்சி சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 59 போலீசாருக்கு வெகுமதியும், பாராட்டு சான்றிதழும் வழங்கி அவர்களை மேலும் சிறப்பாக பணிபுரிய ஊக்கப்படுத்தினார்.

இதில் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாபு அறிவுரை வழங்கினார்.


Next Story