ரூ.16 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


ரூ.16 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
x

பாபநாசம் ஒன்றியத்தில் ரூ.16 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் ஒன்றியத்தில் ரூ.16 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஒன்றியக்குழு கூட்டம்

பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமாஜான், ஒன்றியக் குழு துணை தலைவர் தியாக. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதை கேட்ட ஒன்றியக்குழு தலைவர் ஆணையர்கள் அனைத்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி தரப்படும் என கூறினர்.

வளர்ச்சி பணிகள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், மாவட்ட கலெக்டர் அறிவுரைபடியும், உமையாள்புரம் ஊராட்சி அண்டகுடி சிவன் கோவில் தெரு சாலையை ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் செலவிலும், ஓலைப்பாடி ஊராட்சியில் எருமைப்பட்டி ஆதிதிராவிடர் தெரு செல்லும் சாலையை ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலும் பாபநாசம் ஒன்றியத்தில் 10 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளிகளில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 500 மதிப்பில் பள்ளிகளை பராமரித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் ஆகிய மூன்று பணிகளையும் ஒன்றிய பொது நிதியிலிருந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story