வளர்ச்சி திட்ட பணிகள்
வளர்ச்சி திட்ட பணிகள்
தஞ்சையை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி வகுப்பறையின் சுகாதாரம் குறித்தும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், வைத்தியநாதன்பேட்டையில் உள்ள அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிட பணியையும், வைத்தியநாதன் பேட்டை ஊராட்சியில் காவிரிகரையில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருவையாறு தாசில்தார் பழனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்கென்னடி, நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.