வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x

கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள அன்னை நகர் சஞ்சய் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் மற்றும் மதகு அமைக்கும் பணிகளையும் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.2 லட்சத்துக்கு 98 ஆயிரம் மதிப்பீட்டில் மீன் மற்றும் காய்கறி விற்பனை கூடம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

வீடு கட்டுமான பணி

கருங்கண்ணி ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் ரூ.4 லட்சதத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படித்துறையையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.காரப்பிடாகை வடக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன். ஊராட்சி மன்ற தலைவர் வளன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story