ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM IST (Updated: 27 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை மலைக்கிராமத்தில் ரூ.3 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

பெரும்பாறை மலைக்கிராம பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பெரும்பாறை மலைக்கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக வெள்ளரிக்கரை மலைக்கிராமத்தில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், புல்லாவெளி, கொங்கப்பட்டி, பெரும்பாறை மலைக்கிராமங்களில் 3 மேல்நிலை குடிநீர் தொட்டி, பெரும்பாறையில் ஊராட்சி மன்ற அலுவலகம், பேவர் பிளாக் சாலை, சாக்கடை வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் புல்லாவெளி, வெள்ளரிக்கரை கிராமத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஆத்தூர் ஒனிறிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மணலூர் ஊராட்சி செயலர் திருப்பதி ஆகியோர், பெரும்பாறை மலைக்கிராமத்தில் நடைபெறும் பணிகளை நேற்று ேநரில் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story