ரூ.69 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.69 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:17:49+05:30)

பழையகூடலூர் ஊராட்சியில் ரூ.69 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் ஊராட்சியில் சரூ.69 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, தனிநபர் கழிவறை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சி ஆவணங்களையும் சரிபார்த்தார்.இந்த ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் முருகப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story